அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

சனி, 20 ஜூலை, 2013

புகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு

புகையை கட்டுபடுத்தும் மற்றும் குறைந்த விறகுகளை கொண்டு அதிக எரி சக்தியினை தரும் நவீன அடுப்பு.

காசாங்காடு கிராமத்தில் மிகுந்த அளவில் எரிவாயு கொண்ட அடுப்புகள் இருந்தாலும் மர கழிவுகளை கொண்டு எரிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

சாதரான திறந்த வெளி அடுப்பை விட புகையினை 80% சதவிகிதம் குறைந்த அளவில் வெளியிடும்.

இந்த அடுப்பு பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அடுப்பின் புகை சம்பந்தமான நோய்களை குறைக்க உதவும். காசாங்காடு கிராம சுகாரத்தையும் பாதுகாக்கும்.


நிறுவனம் பகிர்ந்து கொண்ட விலை: Rs 1299/-
தயாரிக்கும் நிறுவனம்: http://greenwaygrameen.com/greenway-smart-stove/


ஞாயிறு, 7 ஜூலை, 2013

கிராமத்தின் மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் சீரமைப்பு மற்றும் மூன்று கட்ட மின்னழுத்த தேர்வு சாதனம் - Automatic Phase Changer & Main Line Stabilizer


நம் கிராம வீடுகளில் மூன்று கட்ட மின்னழுத்த இணைப்புகள் தற்போது பெரும்பாலான வீடுகளில் காணபடுகின்றன. இதற்க்கு இரண்டு காரணங்களுக்காக தேவைபடுகின்றன.

  1. அனைத்து கட்ட மின்னினைப்புகளிலும் சீரான மின்னழுத்தம் கிடைப்பதில்லை (Not all Phases are available)
  2. அனைத்து கட்ட மின்னினைப்புகளிலும் மின்னழுத்தம் கிடைபதில்லை (Not all phases has sufficient voltage)
இதை சரி செய்ய சமீபத்தில் இணையத்தில் தொழில்நுட்பங்களை தேடினோம். இரண்டு கருவிகள் இதை சரி செய்ய கண்டறிந்து கிராமத்தில் சோதனை செய்தோம்.

மின்சுற்று இணைப்பு குறிப்பு:

Mainline -> Automatic Phase Changer -> Mainline Stabilizer -> Output to whole house

மின்னழுத்தம் சீரமைக்கும் கருவி:

V-Guard VGMW 800 Mainline For General Purpose  விலை: ரூபாய். 18,500/-
வாங்கிய இடம்:
68 Thiruvalluvarpuram 2nd street,
Choolaimedu - 600094

தானாக மூன்று கட்ட மின்னழுத கட்டத்தை தேர்வு செய்யும் கருவி: 

RPC-100 Automatic Phase Changeover - விலை:  ருபாய். 5995/-தயாரிப்பாளர் இணைய தள விபரங்கள்: http://www.roshanengg.com/automatic.asp

வாங்கிய இடம்:
Roshan Engineering Corporation
Old no:40-A, New no :24-A,
Dewan rama road,
Purasawalkam,
Chennai-600084.

இந்த கருவியை பொருத்தி ஒரு மாதம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
எந்த வித இடர்பாடு இல்லாமல் மின்னழுத்தம் கிடைகின்றது. கிராமத்தினர் அனைவருக்கும் இந்த தகவல் பயனுள்ள வகையில் அமையுமென நம்புகிறோம்.

மேலும் சிறந்த சாதனங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.