அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

வெள்ளி, 24 ஜூன், 2011

தமிழ் மொழி பெயர்ப்பு தொழில்நுட்பம் - 51 மொழிகளிளிருந்த்தும்


தமிழில் இருந்து வேற்று மொழியில் மொழி பெயர்க்கவும், வேற்று மொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கவும் மற்றும் அந்த மொழிகளில் உச்சரிக்கவும் சிறந்த தொழில் நுட்பம் கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

தினசரி வாழ்வில் பயன்படுத்தி வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

கிராமத்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்: 

இணையத்திலோ அல்லது வேற்று மொழிகளில் படிக்கும் அல்லது கேட்கும் தகவல்களின் தமிழ் மொழிபெயற்பப்புகளை தானியங்கி முறையில் மாற்ற உதவி புரியும் தொழில்நுட்பம்.

முன்பைய சொடுக்கு: இதற்க்கு முன் பகிர்ந்துக்கொள்ள படவில்லை



இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை(இருந்தால்): 

இந்த தளத்தை உருவாக்கிய நிறுவனத்தின் முன்னெச்செரிக்கை பார்க்கவும்.

விரிவான விளக்கம்:


தங்களின் நண்பர்கள் வேற்று மொழியில் இருப்பினும் தமிழில் உள்ள தகவல்களை வேற்று மொழிகளில் மாற்றும் வசதி.

தமிழ் மொழியில் உள்ள நம் கிராமத்தின் வரலாற்று இணையதளத்தை பிரெஞ்சு மொழில் படிக்கவேண்டுமேனின் கீழே சொடுக்கவும்.


அது போல வேற்று மொழிகளில் உள்ள தகவல்களை தமிழில் படிக்கலாம்.

51 மொழிகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

உதாரணமாக இந்திய அரசாங்கத்தின் பக்கங்களை தமிழில் படிக்க வேண்டுமெனின் கீழே சொடுக்கவும்,



உலகத்தை பற்றி அனைத்து தகவலையும் தாய் மொழியிலேயே தெரிந்து கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கிய கூகிள் நிறுவனத்திற்கு எமது நன்றிகள்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

சனி, 18 ஜூன், 2011

பாண்டதிர்க்குள் பாண்டம் - இயற்கை குளிரூட்டி


கிராமத்தினரின் வாழ்க்கை தரத்தை எளிமையான மற்றும் சிக்கனமான  முறையில் வழிவகுத்திட முயன்று வரும் அனைத்து உலகத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

எளிமையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு மின்சாரம் இல்லாமல் குளிரூட்டி செய்வது எப்படி என்பது பற்றியே இந்த தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் தற்போது கிராமத்தினர்களின்  பயன்பாட்டிலும் இருக்கலாம்.

தகவல் பதிவாளர்: சுரேஷ் 
கிரம்த்த்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்:

மின்சாரம் மூலம் அதிக செலவில் பயன்படுத்தகூடிய குளிரூட்டியை நீக்கி இயற்கையான குளிரூட்டிகள். தற்போது இவை குடிதண்ணீர் செமிப்பியாகவும் கிராமத்தில் பயன்படுத்தபடுகிறது.

தண்ணீர் மட்டுமல்லாது காய்கறி கனிகளை எவ்வாறு வீணாகாமல் சேமித்து வைப்பது என்பது பற்றிய தொழில்நுட்பம்.

கண்டுபிடிப்பாளர்: முஹம்மது பாஹ் அப்பா, நைஜீரியா

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை(இருந்தால்): 

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிரமங்களுக்கும் நட்டங்களுக்கும் இணையதளமோ அல்லது அதன் கண்டு பிடிப்பாளர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

விரிவான விளக்கம்:

இதன் ஆங்கில சுட்டி: https://www.planetseed.com/node/20642

இந்த குளிரூட்டி செய்முறை:
இரண்டு மண் பாண்டங்களை ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் இடைவெளியில் எடுத்துகொள்ளவும். மண் பாண்டாங்களில் கீழே ஓட்டைகள் இருப்பினும் அவைகளை உளை கொண்டு அடைத்துவிடுங்கள். இவை தண்ணீர் மற்றும் மணல் கசிவதை தடுக்க உதவும்.  பெரிய மண் பாண்டத்தில் அடியில் மணலை நிரப்பிகொள்ளவும்.


நிரப்பிய மணல் இரண்டு மண் பாண்டங்களின் வாய் ஒரே அளவில் இருக்கும் அளவிற்கு மணலை நிரப்பவும்.


பிறகு சிறிய மண் பாண்டத்தை நடு பகுதியில் (அனைத்து பக்கங்களிலும் இரண்டு பாண்டங்களின் இடைவெளியின் தூரம் ஒரே அளவில் இருக்க வேண்டும்) எடுத்து வைத்து அந்த இடைவெளியில் மணலை நிரப்பவும்.

நிரப்பிய மணலில் தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் வெளியே வராத அளவிற்கு நீரை நிரப்பவும். காசாங்காடு கிராமத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் இந்த மணலில் உள்ள ஈரப்பதம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை தாங்கும்.

மணலுக்கு பதிலாக தேங்காய் மட்டை சோற்றை கொண்டு செய்து பார்க்கவும். தேங்காய் மட்டை சோறு தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளும் திறன் அதிகம். ஆனால் இவை எளிதில் மடித்து விடும் வாய்ப்புகள் உண்டு.


பழம் அல்லது காய்கறிகளை உள்வைத்து ஈர துணியால் மூடவும். 

இயற்க்கை குளிரூட்டி தாங்களின் பயன்பாட்டிற்கு தயார்.



சுமார் 27 நாட்கள் வரை காய்கறி மற்றும் கனிகள் கெடாமல் இருக்க இந்த குளிரூட்டிகள் உதவி புரியும்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/a93cfb178c221f8f